தேசிய செய்திகள்

குஜராத்தில் இருந்து மராட்டியத்திற்கு 45 டன் திரவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டுவரப்பட்டது

மராட்டிய மாநிலத்திற்கு குஜராத்தில் இருந்து 3 டேங்கர் லாரிகளில் 45 டன் திரவ ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டுவரப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மராட்டியத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. இதில் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து கடந்த 23-ந் தேதி 7 டேங்கர் திரவ ஆக்சிஜனுடன் மராட்டியம் வந்தது. இதில் 4 டேங்கர்கள் நாசிக்கிலும், 3 டேங்கர்கள் நாக்பூரிலும் இறக்கப்பட்டன.

இந்த நிலையில் மாநிலத்துக்கு 2-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் குஜராத்தில் இருந்து நேற்று வந்து உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஹாப்பாவில் இருந்து 3 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜனுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11.30 மணியளவில் நவிமும்பையில் உள்ள கலம்பொலிக்கு வந்து சேர்ந்தது. 3 டேங்கர்களிலும் மொத்தம் 45 டன் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்