தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவின் 5 விமானிகள் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தடுப்பூசி போட வலியுறுத்தல்

ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கடந்த மே மாதத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 5 மூத்த விமானிகள் கடந்த மே மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஹர்ஷ் திவாரி, குருபிரதாப் சிங், சந்தீப் ராணா, அமிதேஷ் பிரசாத் மற்றும் பிரசாத் எம் கர்மாகர் ஆகியோராவர்.

இதனை முன்னிட்டு இந்திய வர்த்தக விமானிகளின் கூட்டமைப்பு, விமானிகள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

எனினும், கடந்த மே மாதத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜி.எஸ்.டி. மையத்தில் முகாம் நடத்தி 6 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட பெரிய அளவில் திட்டமிடப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறையால் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை