தேசிய செய்திகள்

கேரளாவில் நோரோ வைரசால் பாதித்த 54 மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கேரளாவில் நோரோ வைரசால் பாதித்த 54 மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியாவில் வித விதமான வைரஸ் நோய்களின் பிறப்பிடமாக கேரளா உள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வெளிநாட்டில் இருந்து பரவியது என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் இருந்து தான் பரவியது. அதை தொடர்ந்து ஜிகா, நிபா என புதுப்புது வைரசுகள் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தங்கும் விடுதியில் 54 மாணவிகளுக்கும், 3 ஊழியர்களுக்கும் நோரோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 8-ந் தேதி முதல் நோரோ தொற்று அறிகுறி தென்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த போது நோரோ வைரஸ் குறித்து சுகாதார துறையின் கவனத்திற்கு வந்தது.

வைரஸ் பாதித்தவர்களின் ரத்தம் திருச்சூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆலப்புழை வைராலஜி ஆய்வு கூடம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டது. இதில் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. அசுத்தமான குடிநீர் காரணமாக இந்த வைரஸ் பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு