தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,965 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.76 லட்சமாக உயர்வடைந்துள்ளது.

மும்பை,

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் சமீப நாட்களாக மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 14 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 937 பேர் குணமடைந்து உள்ளனா. இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 76 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை மராட்டியத்தில் 89 ஆயிரத்து 905 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 75 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,986 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 5,28,462 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்