தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு; டாக்டர்களை முற்றுகையிட்ட உறவினர்கள்

மராட்டியத்தில் பிராணவாயு பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

புனே,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் லட்சக்கணக்கில் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 7 நாட்களாக 1 லட்சம் என்ற எண்ணிக்கையை பாதிப்புகள் கடந்துள்ளன. மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 51,751 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 258 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், மராட்டியத்தின் நலசோபரா பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில் 7 பேர் பிராணவாயு பற்றாக்குறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் ஆகியவற்றால் உயிரிழந்து விட்டனர் என அவர்களது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

எனினும், இந்த பகுதியில் சிக்கலான நிலையில் உள்ள நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கும் ஒரே மருத்துவமனை இது. அந்த நோயாளிகள் வயது மூப்பு அல்லது இணை நோய்கள் ஆகியவற்றால் உயிரிழந்திருக்க கூடும் என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி மருத்துவமனைக்கு எதிராக புகார் அளிக்க நோயாளிகளின் குடும்பத்தினர் விரும்பினால் அளிக்கலாம் என மூத்த காவல் ஆய்வாளர் ராஜேந்திரா தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை