தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில், இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் இன்று 78 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 14 பேரும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேரும், கொல்லம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 4 பேரும், கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேரும், திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 999 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 1303 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,27,402 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,25,417 பேர் வீடுகளிலும் 1,985 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். மேலும் தற்போது கேரளாவில் 128 வைரஸ் தொற்று தீவிரமுள்ள பகுதிகள் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு