தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது - 9 பேர் படுகாயம்

ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருந்ததால், பாலத்தை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்துக்கு அடியில் உறங்கி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இதையடுத்து, உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடிபாடுகளை அகற்றி 9 தொழிலாளர்களையும் மீட்ட மீட்பு குழுவினர் அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்