அமராவதி,
ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,652 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரேநாளில் கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,820 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 9,211 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,18,311 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 85,130 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.