தேசிய செய்திகள்

வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து 6 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது

வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சோழதேவனஹள்ளி:

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபயலகெரே கிராமத்தில் மணீஷ் என்பவர் வசித்து வந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவர் வேலை தேடி பெங்களூருவுக்கு வந்துள்ளார். இங்கு பெயிண்டராக அவர் வேலை செய்து வருகிறார். அவரது வீட்டின் அருகே ஒரு தம்பதி வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் வேலைக்கு தம்பதி சென்ற நிலையில் வீட்டில் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த மணீஷ், குழந்தைக்கு வாழைப்பழம், சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும், குழந்தையை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மணீசை கைது செய்தனர். அவாடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்