டெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மற்றும் 2 வது தளத்தில் மின் ஒயர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவரசர சிகிச்சைபிரிவில் உள்ள ஆய்வகம் மூடப்பட்டது.