தேசிய செய்திகள்

மங்களூருவில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்

தீவைப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையானவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்

தினத்தந்தி

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு குளாய் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா என்ற முகமது முஸ்தபா (வயது 63). இவர் கடந்த 1993-ம் ஆண்டு தீவைப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த 30 ஆண்டுகளாக போலீசார் முஸ்தபாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் உடுப்பி மாவட்டம் பலிமாரில் முஸ்தபா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த முஸ்தபாவை கைது செய்தனர். பின்னர் அவரை வழக்கு விசாரணைக்காக சூரத்கல் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்