புதுடெல்லி,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் நேற்று வரை (ஆகஸ்டு 26ந்தேதி) 51 கோடியே 49 லட்சத்து 54 ஆயிரத்து 309 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
நேற்று ஒரே நாளில் 18.24 லட்சம் கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 79 லட்சத்து 48 ஆயிரத்து 439 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை மொத்தம் 61 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரத்து 542 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.