தேசிய செய்திகள்

மைனர் பெண்னை கர்ப்பமாக்கிய உறவுகார வாலிபர்

சுள்ளியாவில் மைனர்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவுகார வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு: சுள்ளியாவில் மைனர்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவுகார வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மைனர்பெண் பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியை சோந்த மைனர்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதேபோல் புத்தூர் தாலுகா ஆரியட்கா கிராமத்தை சர்ந்தவர் சந்தீப் (வயது 22). இவர் மைனர்பெண்ணின் உறவுகாரர் ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தங்களுடைய செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளனர்.

பின்னர் சில காலமாக ஒருவருக்கொருவர் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மைனர்பெண் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சந்தீப்பும் கலந்துகொண்டார். அப்போது, மைனர்பெண்ணை சந்தீப் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

கர்ப்பம்

இதனால் பயந்து போன மைனர்பெண், அந்த சம்பவம் குறித்து யாரிடமும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மைனர் பெண் திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் மைனர்பெண் தனது அக்காளுடன் சுள்ளியா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மைனர்பெண்ணை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், அவரது அக்காளிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள், இதுதொடர்பாக மைனர்பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி மைனர்பெண் கதறி அழுதுள்ளார்.

வலைவீச்சு

இதையடுத்து மைனர்பெண்ணின் அக்காள், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர் அவர்கள் சுள்ளியா போலீசில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே சந்தீப் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தீப்பை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை