தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு இ-மெயில் விவகாரம் நடிகர் ஹிருத்திக் ரோசன் போலீசில் ஆஜராகி வாக்குமூலம்

நடிகை கங்கனாவுக்கு இ-மெயில் விவகாரம் நடிகர் ஹிருத்திக் ரோசன் போலீசில் ஆஜராகி வாக்குமூலம்.

மும்பை,

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோசனும், நடிகை கங்கனா ரணாவத்தும் காதலித்து பிரிந்தவர்கள். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தனக்கு இ-மெயில் அனுப்பி ஹிருத்திக் ரோசன் தொல்லை கொடுப்பதாக கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார். ஆனால் நடிகைக்கு யாரோ தனது பெயரில் போலி இ-மெயில் அனுப்பியதாக ஹிருத்திக் ரோசன் கடந்த 2016-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்து வரும் மும்பை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடிகர் ஹிருத்திக் ரோசனிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் நேற்று காலை 11.45 மணியளவில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை