தேசிய செய்திகள்

குடிபோதைக்கு அடிமையான தந்தையை கொன்ற வாலிபர்

குடிபோதைக்கு அடிமையான தந்தையை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

துமகூரு: துமகூரு மாவட்டம் மரலூரை சேர்ந்தவர் அசிஉல்லா (வயது 56). இவரது மகன் இம்ரான் (24). கூலி வேலை செய்து வந்த அசிஉல்லா குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் தினமும் குடிபோதையில் வீட்டில் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதுபோல் நேற்று  இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த அசிஉல்லா குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரவில் அவர் வீட்டில் படுத்து தூங்கிவிட்டார்.

குடிபோதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதால் ஆத்திரமடைந்த இம்ரான் நள்ளிரவில், தூங்கிக்கொண்டிருந்த அசி உல்லாவை மூச்சுத்திணறடித்து கொலை செய்தார். இதுகுறித்து துமகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை