தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

டெல்லி,

2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.28) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து வரும் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி மத்திய மந்திரி எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, நாளை காலை 11 மணிக்கு தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி