தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை: வாகா எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இனிப்பு பரிமாற்றம்

பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

வாகா,

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதன்படி, பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில், இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை