தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சம்பூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை