தேசிய செய்திகள்

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

விசாகபட்டினம்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தின் தினேஷ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகிலுள்ள டுமுகு குக்கிராமத்தின் அருகே சாலையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்த சில பயணிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் விசாகப்பட்டினம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு