தேசிய செய்திகள்

தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் - ராணுவ தளபதி எச்சரிக்கை

தேவை என்றால் இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் பாகிஸ்தானிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

எல்லைக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவிரவாத முகாம்களிலிருந்து நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை வரவேற்று வரிசையாக அவர்களை சவக்குழிக்குள் அனுப்ப தயாராகவுள்ளது என்று ராவத் கூறினார்.

தேவை என்றால் எங்களது செய்தியின்படி நடந்து கொள்வோம் என்றார் ராவத்.

இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் (சிறிதும் அச்சமற்ற இந்தியர்கள்) எனும் தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 28-29 தேதிகளின் நள்ளிரவில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று சில தீவிரவாத முகாம்களை அழித்தது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து எல்லைத்தாண்டிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்