தேசிய செய்திகள்

இந்த ஆண்டு தீபாவளிக்கும் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை..!

டெல்லியில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கவுள்ளதாக அம்மாநில மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

டெல்லியில் எல்லா வகையான பட்டாசுகளை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும், ஆன்லைன் டெலிவரி செய்வதற்கும் மற்றும் பட்டாசுகளை வெடிப்பதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் 'பட்டாசு கடை' வைக்க உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு