தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்கு வங்காள கவர்னர் சந்திப்பு

மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் சந்தித்துப் பேசினார். டெல்லியில் திங்கள் கிழமை மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

3 தொகுதிகளில் தேர்தல்

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பானர்ஜி போட்டியிட்டார். இதில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோற்றுப்போனார். ஆனாலும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்றது. அதனால் திரிணாமுல காங்கிரஸ் அரசு அமைத்தது.

மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அவர் 6 மாதங்களுக்குள் மாநில சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லாவிட்டால் அவர் முதல் மந்திரி பதவியில் தொடர முடியாது. இதனால், மம்தா பானர்ஜி வழக்கமாக போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான பவானிபூர் தொகுதி உள்பட மாநிலத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வருகிற 30-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் கடந்த 4-ந்தேதி சனிக்கிழமை அறிவித்து உள்ளது.

பவானிபூர் தொகுதியில் எதிர்பார்த்தது போலவே மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என திரிணாமுல் காங்கிரஸ் நேற்று அறிவித்து உள்ளது. இதைப்போல ஷாம்ஷெர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கு முறையே அமிருல் இஸ்லாம், ஜாகிர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்