புதுடெல்லி,
டெல்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் மூலம் வந்தன. இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகங்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தன. பின்னர் பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து பள்ளி வளாகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் புரளி என தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பஞ்சாப், அரியானா, சண்டிகார், குருகிராம் ஆகிய நகரங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.