தேசிய செய்திகள்

சுவாதி மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் சிராய்ப்புகள்: மருத்துவ அறிக்கை

சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகார்  அளித்துள்ளார்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்து உள்ளனர். கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளிவந்த மருத்துவ அறிக்கையில், சுவாதி மாலிவாலின் இடது கால் மற்றும் வலது கன்னம் ஆகிய பகுதிகளில் சிராய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது.

இடது காலில் 3-க்கு 2 செ.மீ. அளவிலும் மற்றும் வலது கண்ணின் கீழே வலது கன்னம் பகுதியில் 2-க்கு 2 செ.மீ. அளவிலும் காயம் ஏற்பட்டு உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு