தேசிய செய்திகள்

டெல்லியில் பெண் நீதிபதியை கடத்த முயற்சி; கார் டிரைவர் கைது

பெண் நீதிபதியை கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுனரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லியில் பெண் நீதிபதி ஒருவர் கர்கர்டூமா நீதிமன்றத்திற்கு செல்வதற்காக கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால் ஓட்டுநர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை 24 வழியே ஹாப்பூர் நோக்கி சென்றுள்ளார்.

இதனால் பெண் நீதிபதி போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தனது சக நீதிபதியிடமும் இந்த தகவலை தெரிவித்திருக்கின்றார்.

சிறிது தொலைவு சென்றபின்னர் ஓட்டுநர் காரை திருப்பி டெல்லியை நோக்கி ஓட்டியுள்ளார். காரை காஜிபூர் சுங்க சாவடி பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர். தனியார் நிறுவனத்தினை சேர்ந்த அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாடகை டாக்சி நிறுவன உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

கார் டிரைவர் பெயர் ராஜீவ் என்பதும் அவர் துரதிருஷ்டவசம்தாக தான் பாதை மாறி சென்று விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்