தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுதலங்களுக்கு ரெயில் சேவை ரத்து - மத்திய ரெயில்வே நடவடிக்கை

கொரோனா பரவல் காரணமாக மராட்டிய மாநிலத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுதலங்களுக்கு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காட்டு தீயைவிட வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் மாநிலத்தில் நீண்ட தூர ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய ரெயில்வே மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து ஷிரடி சாய்நகர், பண்டர்பூர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு இயக்கப்படும் ரெயில் சேவையை ரத்து செய்து உள்ளது. மராட்டிய அரசு கொரோனா பரவல் காரணமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவையில்லாத பயணங்களை தவிர்க்கும் வகையில் முக்கிய கோவில்களை அடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை