தேசிய செய்திகள்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசா சோதனை; கைதிகள் பதுக்கிய 30 செல்போன்கள் பறிமுதல்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் சோதனை நடத்தி ௩௦ செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

சிவமொக்கா மாவட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகரான ஹர்ஷா கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் கைதான நபர்கள், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் செல்போன் பயன்படுத்தி வருவதாகவும், வீடியோ அழைப்பு மூலமாக பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில், போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சிறை முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சிறையின் பல்வேறு பகுதிகளில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த 30 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் போலீசாருக்கு சிக்கியது.

ஆனால் எந்த ஒரு கைதியிடமும் செல்போன், சிம் கார்டுகள் சிக்கவில்லை. அதே நேரத்தில் நாகேந்திரா என்ற கைதியிடம் போலீசார் சோதனை நடத்த முயன்றாகள். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சிறையில் செல்போன்கள் சிக்கிய விவகாரம் தொடாபாக தனியாக ஒரு வழக்கும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கைதி நாகேந்திரா மீது தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்