ஆகஸ்ட் மாதம் பருவமழையின் போது வரலாறு காணாத கனமழை, வெள்ளம் மற்றும் அதனால் நேரிட்ட நிலச்சரிவு காரணமாக கேரளா மாநிலம் உருக்குலைந்து போனது. மாநிலத்திற்கு பெரும் பொருளாதார இழப்பும் நேரிட்டது, அங்கு வெள்ள நிவாரண மற்றும் கட்டமைப்பு பணிகள் நடக்கிறது. இந்நிலையில் வெளிநாடுவாழ் கேரள தொழில் அதிபர்களிடம் மாநிலத்தை கட்டமைக்க தேவையான நிதியுதவியை பெறுவதற்காக வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இன்று செல்லும் அவர் அக்டோபர் 21-ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டார். இதேபோன்று நிதிதிரட்ட கேரள மாநில 17 அமைச்சர்களும் வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும், மத்திய அரசு முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு மட்டுமே அனுமதியை வழங்கியுள்ளது.
கேரள மாநில முதல்வர் அலுவலக அதிகாரிகள் பேசுகையில், அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது என கூறியுள்ளார். அவர்களும் நிதிதிரட்டதான் 5 நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். பினராய் விஜயன் கடந்த 3-ம் தேதி பேசுகையில், ஒவ்வொரு அமைச்சர்களும் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வார்கள் என தெரிவித்தார். மாநிலத்தில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள உலக வங்கி, ஆசியன் வளர்ச்சி வங்கி, மற்றும் பிற நிதிநிறுவனங்களிடம் இருந்து ரூ. 15,900 கோடியை வாங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.