image credit:ndtv.com 
தேசிய செய்திகள்

பள்ளி பஸ்சின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 3 ஆம் வகுப்பு மாணவன் தலையில் மின்கம்பம் மோதி உயிரிழப்பு!

பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மாணவன், ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்துள்ளான்.

அப்போது எதிர்பாராத வகையில், மின்கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், பள்ளி பஸ்சை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள், ஓட்டுனர் மற்றும் உதவியாளரை கைது செய்தனர்.

மாணவனின் இறப்புக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்களின் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை கேட்டுள்ளது

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்