கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், 'ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை 99 சதவீத மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் தாங்கள் பேசும் மொழியில் சட்டங்களை புரிந்து கொள்வது அவசியம். இதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், என்.ஐ.டி. தர்மிஸ்தா, ஐ.ஐ.டி. டெல்லியை சேர்ந்த மித்தேஷ் கப்தா, ஏக். ஸ்டெப் பவுண்டேசன் விவேக் ராகவன், அகாமி நிறுவனத்தை சேர்ந்த சுப்ரியா சங்கரன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.' என தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்