தேசிய செய்திகள்

தேசியவாதத்தை ஒதுக்கிவிட்டு குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸ்; பா.ஜனதா கூட்டத்தில் நளின்குமார் கட்டீல் பேச்சு

தேசியவாதத்தை ஒதுக்கிவிட்டு காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்கிறது என்று பா.ஜனதா கூட்டத்தில் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

தார்வாரில் பா.ஜனதா தொண்டர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி தேசியவாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்ப அரசியலை முன்வைத்துள்ளது. மகாத்மா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் என்ன தொடர்பு என்று யாராவது கூற முடியுமா?. நாட்டை பிரித்தவர்கள் யார், அதை ஜோடித்தவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நாட்டை பிரித்துவிட்டு இப்போது ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். மதத்தின் பெயரில் நாடு 2 ஆக பிரிக்கப்பட்டது. கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை 2 ஆக உடைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினர். பிரதமராக இருந்த வாஜ்பாய் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை அமைத்து நாட்டை இணைத்தார். அந்த சாலையில் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை நடத்துகிறார். காங்கிரசில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கோஷ்டியை ஓரங்கட்ட மல்லிகார்ஜுன கார்கே கோஷ்டி தயாராகி வருகிறது.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு