கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சுஷில் மோடி குற்றச்சாட்டு

மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

உதய்பூர்,

மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தபோதும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இடையூறு ஏற்படுத்துவதாக பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜக நாடாளுமன்றத்தை நடத்த விரும்புவதாகவும், இந்த விவகாரத்தில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக வெளிப்படையாக கூறியதாகவும், ஆனால் காங்கிரஸ் எந்த விவாதத்தையும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் விவாதத்தை விரும்பவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் அசோக் கெலாட் நிர்வாகத்தின் கீழ் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுஷில் குமார் மோடி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்