தேசிய செய்திகள்

அத்வானியை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவு பெற்றது.

இதில் ஆளும் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளனர்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் எல். கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்