கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குடியிருப்புகளும், சாலைகளும் பனியால் மூடியபடி உள்ளன. இந்தநிலையில் ஸ்ரீநகரின் ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செய்யது எம். அக்கூன் என்பவரது வீட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் எச்.சி.முர்மு என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதிக பனிப்பொழிவு காரணமாக திடீரென அவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதேபோல் குப்வாரா மாவட்டம் ஷா மொகல்லா திரிக்காம் என்ற இடத்திலும் பனிப்பொழிவு காரணமாக கூரை இடிந்து விழுந்தது. இதில் ராணி பேகம் என்ற மூதாட்டி படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தொடர் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக நகர் சர்வதேச விமான நிலையத்தில் 4-வது நாளாக விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு