தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்திப்பு

பிரதமர் மோடியை கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக், நேற்று கோவாவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாகின்றன. இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட உள்ளன. ஜம்மு காஷ்மீர் ஆளுநராக கிரிஷ் சந்த்ராவும் லடாக் ஆளுநராக ஆர்.கே மாதுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை