தேசிய செய்திகள்

பெங்களூருவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் மரணம்

பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் ராதா விஸ்வநாதன் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவர் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருடைய மகள் ராதா விஸ்வநாதன். பெங்களூருவில் வசித்து வந்த இவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவருக்கு வயது 83.

எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றபோது, ராதா விஸ்வநாதனும் உடன் செல்வார். அவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன் சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது தாயார் பாடிய வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம, பஜ கோவிந்தம் பக்தி பாடல்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கோவில்கள், வீடுகளில் இன்றும் ஒலிக்கிறது. அவருடைய குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்