தேசிய செய்திகள்

கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு?

கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இநத கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்மானித்துள்ளார். கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதாவை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர் ஒருவரே தலைவராகும் நிலை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த போது, மேல்-சபை தலைவர் பதவி வழங்குவதாக பசவராஜ் ஹொரட்டிக்கு உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

மேல்-சபை தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி குறித்து மேல்-சபை உறுப்பினர்களுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். இதில், துணை தலைவர் பதவியை பிரானேசுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க திர்மானித்திருந்தாலும், அதுபற்றி பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த வாரமே மேல்-சபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு