தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் வலைதளம் அர்ப்பணிப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87வது பிறந்த தினத்தினை முன்னிட்டு வலைதளம் ஒன்றை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தி கலாம் விசன் டேர் டு டிரீம் என்ற பெயரில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக வலைதளம் ஒன்று இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வலைதளம் ரோபோட்டிக்ஸ், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும். மாணவர்களுக்கான போட்டிகளும் இந்த வலைதளம் வழியே நடத்தப்படும்.

இதனை தொடங்கி வைத்த மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்பொழுது கலாமுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். அவர், கலாம் நல்ல விஞ்ஞானி என்பதுடன் சிறந்த நிர்வாகியும் ஆவார். தனது குழு உறுப்பினர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிப்பவர் என புகழ்ந்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 பள்ளி கூடங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்