தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள குடோனில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குடோன் ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்