தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு! 4 வாரங்களுக்குள் விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன.

ராணுவத்தில் அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ராணுவ ஆயுதப்படைகளில் நிலுவையில் உள்ள பல்வேறு ஆள்சேர்ப்பு செயல்முறைகள் குறித்து தனி பதில் நகலை தாக்கல் செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் மத்திய அரசிடம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு கோரியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்