தேசிய செய்திகள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்- பாஜகவை முந்தியது ஆம் ஆத்மி: 129 வார்டுகளில் முன்னிலை

மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 106 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கதிபூர், சாந்த்நகர், ஜரோடா ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது

பாஜகவின் அல்கா ராகவ் லட்சுமி நகர் தொகுதியிலும், ரிது கோயல் ரோகினி வார்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு