தேசிய செய்திகள்

இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து

இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசியதாவது:- இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும். இந்துக்கள் பெரும்பான்மை குறையத்தொடங்கும் நாளில் இந்தியாவில் ஜனநாயம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

உத்தர பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைய துவங்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

இந்த மாற்றம் நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தலாகும். இந்துக்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ள இடங்களில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. தேசியவாதம் குறைய துவங்கியுள்ளது. இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ள வேளையில், பாகிஸ்தானில் பிரிவினைக்கு பிறகு இந்துக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு