ஜெய்ப்பூர்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ராஜஸ்தான் எல்லைக்கு அருகே, வசிக்கும் இந்து குடும்பங்கள் ஒரு பாதுகாப்பான புகலிடத்திற்காக இந்தியாவுக்கு திரும்ப விரும்புகிறார்கள். எனினும் அவர்கள் உளவாளியாக இருப்பார்கள் என அவர்கள் திரும்பத் தள்ளப்படுகிறார்கள். மீண்டும் அங்கு செல்லும் அவர்கள் வலுகாட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள், குடும்பம் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக அவர்களும் மதம் மாறுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
சிந்து மாகாணத்தில் உள்ள எல்லை ஓர கிராமமான மடாலி கிராமத்தில் கடந்த மார்ச் 25 ந்தேதி 500 இந்துக்கள் மதம் மாற்றப்பட்டு உள்ளனர். சுமார் ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறியவர்கள் ஜோத்பூர் மற்றும் ராஜஸ்தானின் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
அவர்கள் இங்கு குடியேற விரும்பும் நோக்கத்துடன் இங்கு வந்துள்ளனர். ஆனால் சி.ஐ.டி. மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நிர்வாகம், வழங்கிய தரவுகளின்படி பாகிஸ்தானிலிருந்து 968 இந்துக் குடிமக்கள் கடந்த இரு ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் சந்துபால் குடும்பமும் ஒன்று. இவர்கள் சிஐடியால் மீண்டும் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அனுப்பபட முயற்சித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ராஜஸ்தான் ஐகோர்ட்டை நாடினர். ஐகோர் தடை விதித்து உள்ளது.
ஆனால், இதற்கு முன்னர்,சந்துபால் அவரது மனைவி தாமி, மகன் பகவான், மருமகள் தர்மா, பேரன் ஜெய்ராம் மற்றும் பேத்தி கவியா ஆகியோர் ஜோத்பூரிலிருந்து தார் எக்ஸ்பிரஸ் மூலம் 2017 ஆகஸ்ட் 5 அன்று நாடு கடத்தினர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பே, தார் எக்ஸ்பிரஸ் எல்லையை அடைந்தது. இப்போது, மதம்மாற குடும்பத்திற்கு அழுத்தம் உள்ளது.
பாகிஸ்தானில் மத மற்றும் சரீர பாகுபாட்டை எதிர்கொண்ட பின்னர் ஜோத்பூருக்கு வந்த தாக்கூர், ஹமிரா, பகவான், புராஸ், குஷால், தர்மராம் மற்றும் நாக்தா போன்ற பல குடும்பங்கள் மீண்டும் நாடு கடத்தப்பட்டன. இதனால் பல கிராமங்களில் இந்து மக்கள் மறைந்து போயுள்ளனர். பாகிஸ்தானிய ஊடகத்தில் மத மாற்றத்தை பற்றிய செய்தி அதிகம் வெளியாகிறது.
சீமாந்த் லோக் சங்கானின் தலைவர், இந்து சிங் சோதா, பாகிஸ்தான் குடியேறிகளுக்காக போராடி வருகிறார். இவர் கூறும் போது இந்துக்கள் பெரும் நம்பிக்கையுடன் இந்தியா வருகின்றனர், ஆனால் சிஐடி அவர்களை சித்திரவதைக்கு ஆளாக்க அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச்செல்கிறார்கள் என கூறினார்.
இது ராஜஸ்தானுக்கு அருகிலுள்ள கிராமங்களில் நீண்ட காலமாக நடக்கிறது. அவர்கள் விசாக்கள் ஒருபோதும் நீட்டிக்கப்படுவதில்லை. இடம்பெயர்ந்த இந்துக்களின் புனர்வாழ்வுக்கா மத்திய அரசு திட்டம் கொண்டு வந்து உள்ளது. ஆனால் அதனை மாவட்ட நிர்வாகம் செய்வது இல்லை என கூறினார்.
மடாலி, டீப்லா மிதி, நகர் பார்கர், குன்றி, உமர் கோட் சமாரோ, இஸ்லாம்பூர், சசரோ,கிலலொய், பிதாரோ மற்றும் ராஜஸ்தான் அருகே இருக்கும் மற்ற கிராமங்களிலும் இவை நீண்டகாலங்களாக உள்ளன.