தேசிய செய்திகள்

ராகுல்காந்தி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும் - சபாநாயகர் அறிவிப்பு

ராகுல்காந்தி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், பிரான்சிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்து கொண்ட ஒப்பந்தம் ரகசியமானது அல்ல. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களிடம் பொய் சொல்கிறார். மேலும் பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, கொறடா அனுராக் தாகூர், துஷ்யந்த் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தனர். க்ஷ்இந்த நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதும் பேசிய பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல்காந்தி மீது பா.ஜனதா சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்து இருக்கிறோம். ராகுல்காந்தி எப்போது பேசினாலும், அது பா.ஜனதாவிற்கு ஓட்டுகளை அதிகரிக்கச்செய்கிறது என்றார்.

அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, இந்த நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். பிறகு இதுபற்றி உங்களுக்கு தெரியும் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு