தேசிய செய்திகள்

ஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை கூடாது: ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு

ஊழல் புகார் கூறும் மொட்டை கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பெயர், ஊர் எதுவும் இன்றி, மொட்டை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஊழல் புகார்களை அடிப்படையாக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அனைத்து அரசுத்துறைகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அதன்பிறகும், மொட்டை கடிதம் அடிப்படையில் சில அரசுத்துறைகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிய வந்தது.

இந்த நிலையில், தங்கள் உத்தரவை மீறி, மொட்டை கடிதத்தில் கூறப்படும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதை கடுமையாக அணுகுவோம் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை