தேசிய செய்திகள்

சத்தீஷ்கர்: மாவோயிஸ்டு தாக்குதலில் துர்தர்ஷன் ஒளிப்பதிவாளர், பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தாக்குதலில் துர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் பாதுகாப்பு படையினர் 2 பேர் என மொத்தம் 3 பேர் பலியாகினர்.

ராய்பூர்,

சத்தீஷ்கர் மாநிலத்தில் தந்தன்வேடா என்ற இடம் அருகே உள்ள அர்னாபூர் பகுதியில், மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது, துர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

போலீசார் இருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் தொடர்பான செய்திகளை சேகரிக்க துர்தர்ஷன் செய்தியாளர் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன், பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 4 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது. 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில், வரும் நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு