தேசிய செய்திகள்

பிரதமர் தலைமை மீது நம்பிக்கை எதிரொலி; மராட்டிய மேலவை வெற்றி: ஜே.பி. நட்டா பேச்சு

மராட்டிய மேலவை வெற்றியானது பிரதமர் மோடியின் தலைமை மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என பிரதிபலித்து உள்ளது என ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

புனே,

மராட்டிய மேலவை தேர்தலில் மொத்தம் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை பா.ஜ.க. வென்றது. இதுபற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசும்போது, மராட்டிய மேலவை தேர்தலில் பெற்ற வெற்றியானது பிரதமர் மோடியின் தலைமை, அவரது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என பேசியுள்ளார்.

இதற்காக பா.ஜ.க.வின் மராட்டிய தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அனைத்து மராட்டிய பா.ஜ.க. தொண்டர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்