தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் சபாநாயகர் தேர்தல்: நானா படோலே

பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் என நானா படோலே கூறியுள்ளார்.

தினத்தந்தி

காலியாக உள்ளது

மராட்டிய சட்டசபை சபாநாயகராக இருந்த நானாபடோலே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். எனவே கடந்த ஒரு ஆண்டாக சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது சபாநாயகர் பதவிக்கான தேர்தலை நடத்த மகாவிகாஸ் அகாடி முயற்சி செய்தது. ஆனால் கவானர் பகத்சிங் கோஷ்யாரிக்கும், மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்போது அந்த தேர்தலை நடத்த முடியாமல் போனது.

பட்ஜெட் கூட்டத்தொடர்

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:- பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். தேர்தல் இறுதி செய்யப்பட்டவுடன், கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

இதேபோல மார்ச் 10-ந் தேதிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் ஜனதா தாபார்' (மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி) நிகழ்ச்சிகளை நடத்தும் எனவும் நானா படோலே கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்