தேசிய செய்திகள்

பெட்ரோல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

பெட்ரோல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

குண்டூர்,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ராமசந்திரபுரம் என்ற கிராமத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு பழுதடைந்த பல்புகளை நீக்கிவிட்டு புதிய பல்புகள் பொருத்தும் பணியில் சீனிவாசராவ் (வயது 45), மவுலளி (22) சேகர் (48) ஆகிய தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் பயன்படுத்திய இரும்பு ஏணி எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. இதில், மின்சாரம் தாக்கி 3 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்