புதுடெல்லி,
பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் விமர்சித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று, பொருளாதார பிரச்சினைகள், லடாக் பிரச்சினை ஆகியவற்றை குறிவைத்து மோடியை அண்மைக்காலமாக ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார்.
இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒருவரைத் தவிர அனைவருக்கும் இந்திய இராணுவத்தின் திறனும் வீரமும் தெரியும். மோடியின் பொறுப்பற்ற தனம், சீனா நம் நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கிறது. மோடியின் பொய்கள், சீனா ஆக்கிரமித்த நம் நிலத்தை அவர்களே வைத்துக்கொள்ள உதவுகிறது என்று சாடியுள்ளார்.